Respuesta :

Answer:

its in tamil down here

Explanation:

பெண் கல்வியின் அவசியம்

ஆண் ஒருவர் கல்வி கற்றால் அவர் ஒருவருக்கு மட்டுமே அறிவு வளர்ச்சி அடையும். ஆனால், பெண் ஒருவர் கல்வி கற்றாலோ அக்குடும்பம் முழுதும் கல்வி அறிவும் பெறும். ஏனென்றால் தாயின் மடியிலேயே குழந்தை கல்வி கற்க ஆரம்பித்து விடுகிறது. எனவே அனைத்து குழந்தைகளும் கல்வி அறிவு பெறும்பொழுது குடும்பம் முழுவதும் கல்வி அறிவு பெறுவது இயல்புதானே !

பெண் கல்வியின் பயன்கள்

பெண்கள் கல்வி பெற்றதால் சமையல் அறையில் முடங்கி கிடந்த பெண் சமுதாயம் சாதனை பல புரிந்துள்ளது. இன்று உலகின் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் கடமைகளை ஆற்றி உள்ளனர். விளையாட்டுத்துறை முதல் விண்வெளி ஆராய்ச்சி துறை வரை சாதனைகள். கல்பனா சாவ்லா முதல் பி வி சிந்து வரை உதாரணங்களாய் இருக்கின்றனர். ஆசிரியர் தொழிலில் பெரும்பான்மை வகிப்பவர்கள் பெண்களே. பாரத நாட்டை ஆண்டவர்களில் ஜான்சி ராணி, அகல்யாபாய் முதல் இந்திரா காந்தி, ஜெயலலிதா வரை பெண்களும் உள்ளனர் . பல்வேறு நாடுகளிலும் ஆட்சி பொறுப்பை பெண்கள் ஏற்று நடத்தி காட்டி வருகின்றனர் . ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தது வருகின்றனர்.

நாடும் வீடும் நலம் பெறவும் வளம் பெறவும் ஒளியோடு விளங்கவும் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும். பெண்களை கடவுளாக தொழுகின்ற நாமும் பெண்களை கல்வி பெறச் செய்வோம் . வீட்டில் விளக்கேற்றும் பெண்கள் உலகிற்கு ஒளியாகத் திகழ பெண்கல்வியை வளர்ப்போம்.